NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / பொது நீச்சல் குளத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விஷயங்கள்! 
    வாழ்க்கை

    பொது நீச்சல் குளத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விஷயங்கள்! 

    பொது நீச்சல் குளத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விஷயங்கள்! 
    எழுதியவர் Arul Jothe
    May 24, 2023, 06:34 pm 0 நிமிட வாசிப்பு
    பொது நீச்சல் குளத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விஷயங்கள்! 
    பொது நீச்சல் குளத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விஷயங்கள்

    பொது நலக் குறிப்புகள்: நீச்சல் குளத்தைப் பயன்படுத்துவதற்கு சில வழிகாட்டு விதிமுறைகள் உள்ளன. நீங்கள் எவ்வளவு வயதானவராக இருந்தாலும் நீச்சல் குளங்கள் என்று வந்துவிட்டால் மிகவும் வேடிக்கையாக நடந்துகொள்ள தோன்றும். சிலர் நீச்சல் குளத்தில் குதிக்கும் ஆர்வத்தில் தண்ணீர் வெளியே தெறிக்கும் அளவிற்கு குதிப்பார்கள். மேலும் தங்களது உற்சாகத்தைக் காட்டவும், ஒருவரின் கவனத்தைப் பெறவும் இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்குவதற்கும் இவ்வாறு செய்கிறார்கள். இருப்பினும், பொது நீச்சல் குளங்களில் இவ்வாறு செய்வது தவறு. குளத்தில் சிறுநீர் கழிக்க கூடாது: நீச்சல் குளத்தில் சிறுநீர் கழிக்கவே கூடாது. இது ஒரு அபத்தமான செயலாகும். சிறுநீர் நிரம்பிய குளத்தில் யாரும் நீந்த விரும்புவதில்லை. அனைவரும் பயன்படுத்தும் நீச்சல் குளத்தை சுத்தமானதாக வைத்திருப்பது நம் கடமை.

    கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்:

    நீங்கள் குளத்தில் இறங்குவதற்கு முன் குளிக்கவும்: நீங்கள் குளத்தில் குதிக்கும்முன், குளிக்க மறக்காதீர்கள். உடலில் இருக்கும் அழுக்கு மற்றும் கிருமிகளைக் அகற்றுவது முக்கியம். சோப்பைப் பயன்படுத்திக் குளிப்பது வயிற்றுப்போக்கு, காது மற்றும் தோல் நோய்த்தொற்றுகளால் நோய்வாய்ப்படுத்தக்கூடிய மோசமான கிருமிகளை அகற்ற உதவுகிறது. மற்ற நீச்சல் வீரர்களிடம் கண்ணியமாகவும் அக்கறையுடனும் இருங்கள்: நீங்கள் குளத்தில் மகிழ்ச்சியாக இருக்கும்போது, மற்ற நீச்சல் வீரர்களிடம் கனிவாகவும் அக்கறையுடனும் இருக்க நினைவில் கொள்ளுங்கள். இடையுறு விளைவிக்கும் வகையில் குளிப்பது, அதிகப்படியான சத்தம் போன்றவற்றை தவிர்க்கவும். பொருத்தமான நீச்சலுடைகளை அணியுங்கள்: நீங்கள் குளத்தில் நீச்சல் அடிக்கும்போது சரியான நீச்சலுடைகளை அணிய வேண்டும். டெனிம் ஜீன்ஸ் அணியாதீர்கள், அவை தண்ணீரை உறிஞ்சும் தன்மை உடையது. அதனால் உங்களுக்கு சிரமம் ஏற்படலாம் .

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    உடல் நலம்

    உடல் நலம்

    மெனோபாஸ் என்பது என்ன ? அதன் அறிகுறிகள் யாவை?  உடல் ஆரோக்கியம்
    தலைவலியை போக்க இந்த ஆயுர்வேத எண்ணெய்களை பயன்படுத்துங்கள்! உடல் ஆரோக்கியம்
    உடல் எடை குறைய மோனோ டயட்! கேள்விப்பட்டதுண்டா? உடல் பருமன்
    செயற்கை இனிப்புகளின் பயன்பாடு மற்றும் அதன் பக்க விளைவுகள்!  உடல் ஆரோக்கியம்

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023