ஹை பிளட் பிரஷர் Vs ஆல்கஹால்: இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் வருவதற்கான காரணங்கள்!
செய்தி முன்னோட்டம்
உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு தீவிரமான உடல்நலப் பிரச்சினை ஆகும். இது இதய நோய்கள் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கக் கூடியது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மது அருந்துவது இன்னும் ஆபத்தானதாக மாறலாம். இது வெறும் இரத்த அழுத்தத்தை மட்டும் அதிகரிப்பது கிடையாது, மாறாக இதய நோய்கள் வருவதற்கான அபாயத்தையும் பல மடங்கு உயர்த்தும். மது அருந்துவது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு எப்படி எல்லாம் தீங்கு விளைவிக்கும் என்பதை இப்போது விளக்கமாகப் பார்ப்போம்.
#1
இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது
மது அருந்துவது இரத்த அழுத்தத்தை நிலையற்றதாக்கிவிடலாம். குறிப்பாக, மதுவுடன் எண்ணெய் பலகாரங்கள் மற்றும் காரமான உணவுகளை உட்கொள்ளும்போது இரத்த அழுத்தத்தில் பெரிய ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். மேலும், மது அருந்துவதால் உடலில் நீர்ச்சத்து குறையும். இந்த நீர்ச்சத்து குறைபாடு இரத்த அழுத்தத்தை இன்னும் அதிகமாக உயர்த்திவிடும். எனவே, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மது அருந்துவது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
#2
உடல் எடையை அதிகரிப்பது
மதுவில் உள்ள அதிக கலோரிகள் உடல் எடையை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைகின்றன.உடல் எடை அதிகரிப்பது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஒரு கூடுதல் ஆபத்தாகவே கருதப்படும். ஏனெனில், அதிக உடல் எடை இதயத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.இதனால், இதய நோய்கள் வருவதற்கான அபாயமும் அதிகரிக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல், எடை கூடும்போது உடல் செயல்பாடுகள் குறைந்துவிடும். இதுவும் உயர் இரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும். எனவே, மது அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது.
#3
தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்துவது
மது அருந்துவது தூக்கத்திற்கு பெரும் இடையூறை ஏற்படுத்தலாம். சிலர் மது அருந்தினால் நல்ல தூக்கம் வரும் என்று தவறாக நம்பினாலும், அது உண்மையில்லை. மது அருந்துவதால் தூக்கம் அடிக்கடி தடைபடும், இதனால் அடுத்த நாள் காலை மிகவும் சோர்வாக உணரப்படும். மேலும், மது அருந்துவதால் தூக்கத்தின் தரமும் பாதிக்கப்படுகிறது, இதன் காரணமாக உடல் மற்றும் மனம் இரண்டுமே சோர்வடைந்துவிடும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த தூக்கமின்மை அல்லது தரமற்ற தூக்கம் மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது.
#4
மருந்துகளுடன் வினை புரிவது
உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை உட்கொள்ளும் ஒருவர், அத்துடன் மதுவும் அருந்தினால் அது மிகவும் ஆபத்தானதாக அமையும். மதுவுக்கும் மருந்துகளுக்கும் இடையே மோசமான எதிர்வினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மருந்தின் செயல்பாடு குறைந்துபோகலாம் அல்லது மருந்தின் வீரியம் மிக அதிகமாகிவிடலாம். இது இரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்து, பிற உடல்நலப் பிரச்சினைகளையும் உருவாக்கக்கூடும்.
#5
மன ஆரோக்கியத்தை பாதிப்பது
மது உடலுக்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது மன அழுத்தம், பதட்டம் போன்ற பிரச்சினைகளை உருவாக்கலாம், இவை உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கூடுதல் ஆபத்தாக மாறிவிடக்கூடும். ஆகையால், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஏனெனில் இது அவர்களுக்குப் பல ஆபத்தான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியது. மக்கள் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்தி, மது அருந்துவதிலிருந்து விலகி இருப்பது மிகவும் சிறந்தது.