
பொம்மையை ஒப்படைக்க ஒரு குழந்தையை வலைவீசி தேடிய ரயில்வே அதிகாரிகள்!
செய்தி முன்னோட்டம்
கடந்த ஜனவரி 3ஆம் தேதி விபூதிபூஷன் பட்நாயக் என்ற இந்திய ராணுவ ஹலில்தார் செகந்திராபாத்-அகர்தலா எக்ஸ்பிரஸில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அவர் இருந்த அதே ரயில் பெட்டியில் அட்னான் என்ற 19 மாத குழந்தையும் அவனது பெற்றோரும் பயணம் செய்தனர்.
பயணம் முழுவதும் அட்னான் ஒரு ரயில் பொம்மையை வைத்து விளையாடி கொண்டிருந்திருக்கிறான்.
அவனுடன் பயணம் செய்தவர்கள் யாராலும் அந்த பொம்மையை தொட கூட முடியவில்லை.
யார் அதை தொட்டாலும் கத்தி கூச்சலிட்டிருக்கிறான் அந்த வாண்டு சிறுவன்.
இந்நிலையில், பயணம் முடிந்து கிஷன்கஞ்ச் என்ற இடத்தில் இறங்கும் போது, அட்னான் எப்படியோ அந்த பொம்மையை ரயில் இருக்கையிலேயே விட்டு சென்றுவிட்டான்.
உதவி
அவசர உதவி எண் மூலம் குழந்தையை கண்டறிந்தது:
குழந்தை அட்னான், தனக்கு பிடித்த பொம்மையை ரயிலிலேயே விட்டு சென்றுவிட்டான் எனபதை அறிந்த விபூதிபூஷன் பட்நாயக், உடனே 139 என்ற ரயில்வே உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்திருக்கிறார்.
அதற்கு, மக்கள் விட்டு செல்லும் முக்கியமான பொருட்களைத் திருப்பி கொடுப்பதற்காக மட்டும் இந்த ஹெல்ப்லைன் என்று உதவி மையம் தெரிவித்தது.
"நமக்கு முக்கியமாக ஆயிரம் விலையுர்ந்த பொருட்கள் இருக்கலாம். ஆனால், அந்த குழந்தையை பொறுத்தவரை இந்த பொம்மை ரயில் தானே முக்கியமானது'" என்ற அர்த்தத்தில் பட்நாயக் விளக்கம் அளித்திருக்கிறார்.
இதனையடுத்து, ரயில்வே அதிகாரிகள் பொம்மை ரயிலை அட்னானிடம் ஒப்படைக்க முன்வந்தனர்.
இதன் பிறகு, அட்னானின் முகவரியை கண்டறிவதற்காகவே ஒரு தனி குழு அமைக்கப்பட்டு, குழந்தையிடம் பொம்மை ரயில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.