Page Loader
மதிய உணவு திட்டத்தில் சிக்கன் மற்றும் பழங்கள்: மேற்கு வங்க அரசு!
"இந்த வாரம் முதல் 4 மாதங்களுக்கு சிக்கன் மற்றும் பழங்கள் மதிய உணவோடு வழங்கப்படும்": மேற்கு வங்க அரசு

மதிய உணவு திட்டத்தில் சிக்கன் மற்றும் பழங்கள்: மேற்கு வங்க அரசு!

எழுதியவர் Sindhuja SM
Jan 07, 2023
09:43 am

செய்தி முன்னோட்டம்

மேற்கு வங்க மாநில அரசு மதிய உணவு திட்டத்தில் சிக்கன் மற்றும் பழங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சி செய்து வரும் நிலையில், அம்மாநில அரசு, மதிய உணவு திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. மேற்கு வங்கத்தில் தமிழகத்தை போலவே அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் மேற்கு வங்கத்தில் சுமார் 1.16 கோடி மாணவர்கள் பயனடைகிறார்கள்.

மேற்கு வங்கம்

மேற்கு வங்க அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தற்போது, அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் சாதம், பருப்பு, காய்கறி, சோயாபீனஸ், முட்டை போன்றவை மதிய உணவாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி, இந்த வாரம் முதல் மதிய உணவோடு சிக்கன் மற்றும் பழங்கள் வழங்கப்படும். இதற்காக 371 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்படும். இந்த திட்டத்தை மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து நடத்துவதால், 40 சதவீத நிதியை மத்திய அரசும், 60 சதவீத நிதியை மாநில அரசும் வழங்கும். இந்த வாரம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஒவ்வொரு வாரமும் சிக்கன் மற்றும் பழங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும். என்று அறிவித்துள்ளது.