வானிலை அறிக்கை: மார்ச் 7- மார்ச் 11
மார்ச் 7ஆம் தேதி கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மார்ச் 8ஆம் தேதியில் இருந்து 10ஆம் தேதி வரை தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மார்ச் 11ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாக இருக்கும்.