அடுத்த செய்திக் கட்டுரை

வானிலை அறிக்கை: பிப்ரவரி 23- பிப்ரவரி 27
எழுதியவர்
Sindhuja SM
Feb 23, 2023
02:45 pm
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் 27ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 23 மற்றும் பிப்ரவரி 24ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுசேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். ஒரு சில இடங்களில் தட்பவெப்பநிலை இயல்பை விட 2 அல்லது 3 செல்சியஸ் அதிகமாக பதிவாக வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பிப்ரவரி 25ஆம் தேதியிலிருந்து 27ஆம் தேதி வரை வானிலை வறட்சியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானிலை மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
ட்விட்டர் அஞ்சல்
கடந்த 24 மணிநேரத்தில் அதிக வெப்பநிலை பதிவான இடங்களின் விவரம்
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) February 23, 2023
செய்தி இத்துடன் முடிவடைந்தது