வேலூரில் தாழ்த்தப்பட்டோருக்கு மயானத்தில் அமைக்கப்பட்ட பொது கழிப்பிடம்
தமிழகத்தில் வேலூர் மாவட்டம் கண்ணியம்பாடி ஊராட்சி கம்மசமுத்திரம் கிராமத்தில் வசிக்கும் 70 தாழ்த்தப்பட்ட குடும்பங்களை சார்ந்த 300க்கும் மேற்பட்டோருக்கு தனியே கழிப்பறை வசதி இல்லை என கூறப்படுகிறது. கடந்த 2ஆண்டுகளுக்கு முன்னர் ஊராட்சி மூலம் ஓர் கழிப்பறை கட்டி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த கழிப்பறை ஊருக்கு வெளியிலுள்ள மயான பூமியில் கட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த கழிப்பறையின உபயோகிக்க முடியாமல் அவர்கள் தங்கள் பக்கத்து வீட்டு கழிப்பறை அல்லது திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலைக்கு அந்த ஊர் தாழ்ந்த ஜாதியை சேர்ந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து செய்தியாளர்கள் அங்கு நேரில் சென்று தகவல்களை சேகரித்துள்ளனர். அதில் அவர்கள் தங்கள் தங்கியுள்ள இடத்தில் இருந்து 1கிமீ தூரம் தள்ளி அந்த கழிப்பறை உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
2015 ஸ்வச் பாரத் மிஷனின் கீழ் கழிப்பறை வசதி
ஆதிதிராவிடர் காலனியில் 3 தெருக்களில் 171குடும்பங்கள் உள்ள நிலையில், அவர்கள் எல்லோரும் தினக்கூலி அல்லது காலனி தொழிற்சாலையில் வேலை செய்துவருபவர்கள். இவர்கள் தங்கள் அனைவருக்கும் தனித்தனியே இந்திய ரககழிப்பறை வேண்டும் என்று கோரி வந்தனர். 2015ஸ்வச்பாரத் மிஷனின்கீழ் கழிப்பறைகட்ட வசதியிருந்த 50%வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டன. மீதமுள்ளோருக்கு 2020-21ஆண்டில் SBMன் கீழ் 5,25,000செலவில் இரண்டு மேற்கத்திய வகை பொதுக்கழிப்பறைகளை கட்ட பஞ்சாயத்து முடிவுசெய்துள்ளது. அதன்படி காலனியில் உள்ளோரிடம் கலந்துபேசாமல் கல்லறை பகுதியில் கொண்டு கழிப்பறையை கட்டியதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். மேலும் உபயோகமில்லாமல் உள்ள அந்த கழிப்பறையில் காலி மதுபாட்டில்கள் கிடப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது மயானத்தில் உள்ள அந்த கழிவறையை தங்கள் இருப்பிடத்திற்கு அருகே கட்டிதரவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.