
மாணவியின் கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாரஸ்ய பதில்
செய்தி முன்னோட்டம்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் உள்ள சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75வது பவள விழா நடந்தது.
இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.
அதன் பின்னர் மாணவர்களிடம் அவர் பேசுகையில், இணையத்தள வசதியை மாணவர்கள் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இதனையடுத்து ஆளுநர் அவர்கள் பவள விழா கல்வெட்டினையும் திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து, சிவானந்த சரஸ்வதி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இந்த கலந்துரையாடலின் பொழுது மாணவ-மாணவிகளுடன் ஆளுநர் பேசுகையில் தற்போதைய காலகட்டத்தில் 24 மணி நேரமும் இணையத்தள வசதி கிடைக்கிறது என்று குறிப்பிட்டு பேசினார்.
கேள்வி பதில்
மாணவர்களோடு கலந்துரையாடல் - 24 மணிநேர இணையத்தள சேவை
தொடர்ந்து பேசிய அவர் தற்போது கிடைக்கும் இந்த 24 மணிநேர இணையத்தள சேவையை முறையாக பயன்படுத்தினால் அதைவிட சிறந்தது வேறு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து மாணவர்கள் தங்களுடைய கல்வியில் வெற்றிபெற வேண்டுமெனில், தங்களது பலத்தை தெரிந்துகொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஆலமரத்தின் விதை சமையலுக்கு பயன்படும் கடுகை விட சிறியது.
ஆனால் அது மரமாகும் பொழுது மிக பெரிதாக வளரும் வலிமை கொண்டது என்று கூறினார்.
இதற்கிடையில் தமிழ்நாட்டில் தங்களுக்கு பிடித்த உணவு எது என்று மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, தனக்கு நெய் சேர்த்த பொங்கல் மற்றும் இனிப்பு வகையில் கேசரி பிடிக்கும் என்று அவர் பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.