Page Loader
வீடியோ: விமான பணிபெண்ணை அவமதிக்கும்படி நடந்து கொண்டதால் பயணி கைது
வைரலான இந்த வீடியோவில் ஸ்பைஸ்ஜெட் பயணி ஊழியர்களை கண்டபடி திட்டுவதை காணலாம்

வீடியோ: விமான பணிபெண்ணை அவமதிக்கும்படி நடந்து கொண்டதால் பயணி கைது

எழுதியவர் Sindhuja SM
Jan 24, 2023
03:45 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் இருந்து ஹைதராபாத் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணித்த விமான பணிப்பெண்ணை அவமதிக்கும்படி நடந்து கொண்டதால் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் பாதுகாப்பு அதிகாரிகள் புகார் அளித்ததை அடுத்து அப்சர் ஆலம் என்ற பயணி கைது செய்யப்பட்டார். இந்த பயணி மீது 354 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்த இரண்டு பயணிகள் தவறான நடத்தையில் ஈடுபட்டதையடுத்து, விமான பணியாளர்கள் அவர்களை விமானத்தை விட்டு வெளியேற்றும் ஒரு வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. வெளியேற்றபட்ட இரண்டு பயணிகளும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த பயணிகளில் ஒருவர் விமான பணிப்பெண்ணை "தொல்லை" செய்ததாக அதிகாரிகள் கூறி இருக்கின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

வைரலான ஸ்பைஸ்ஜெட் பயணியின் வீடியோ