
உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்
செய்தி முன்னோட்டம்
சட்டத்தை இயற்றுவதற்காக கூட்டப்பட்ட சிறப்பு சட்டசபையின் இரண்டாவது நாளான இன்று, உத்தரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
பொது சிவில் சட்ட மசோதா இன்று உத்தரகாண்ட் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டால், நாட்டிலேயே பொது சிவில் சட்டத்தை(யுசிசி) ஏற்றுக்கொண்ட முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறும்.
பொதுவான தனிப்பட்ட சட்டங்களை நிறுவும் நோக்கத்துடன் UCC மசோதாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை, முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான மாநில அமைச்சரவை அந்த மசோதாவை ஏற்றுக்கொண்டது.
இன்று காலை 11:00 மணிக்கு சிறப்பு அமர்வு தொடங்கும் போது UCC மசோதாவை முதல்வர் தாமி தாக்கல் செய்வார்.
உத்தரகாண்ட்
இன்று தாக்கல் செய்யப்பட இருக்கும் UCC மசோதாவின் சில முக்கிய அம்சங்கள்:
மகன் மற்றும் மகளுக்கு சமமான சொத்துரிமை
முறையான மற்றும் முறைகேடான குழந்தைகளுக்கிடையேயான வேறுபாட்டை நீக்குதல்
தத்தெடுக்கப்பட்ட மற்றும் உயிரியல் ரீதியாக பிறந்த குழந்தைகளை உள்ளடக்கிய சம சொத்துரிமை
பலதார மணம் மற்றும் குழந்தை திருமணத்திற்கு முழுமையான தடை
அனைத்து மதங்களிலும் உள்ள பெண்களுக்கு பொதுவான திருமண வயது
விவாகரத்துக்கு ஒரே மாதிரியான காரணங்கள் மற்றும் நடைமுறைகளை அமல்படுத்துதல்
நான்கு தொகுதிகளையும் 740 பக்கங்களையும் கொண்ட சீரான குடிமைச் சட்டத்தின் இறுதி வரைவு பிப்ரவரி 2ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவால் முதல்வர் தாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.