LOADING...
விஜயின் கரூர் பிரச்சாரத்தில் சோகம்; கூட்ட நெரிசலில் 10 பேர் பலி
விஜயின் கரூர் பிரச்சார கூட்ட நெரிசலில் 10 பேர் பலி

விஜயின் கரூர் பிரச்சாரத்தில் சோகம்; கூட்ட நெரிசலில் 10 பேர் பலி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 27, 2025
08:53 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சாரத்தின்போது கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பும், அதைத் தொடர்ந்து எதிர்பாராத விளைவுகளும் ஏற்பட்டன. 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய கொங்கு மண்டல மாவட்டங்களில் அவர் சனிக்கிழமை (செப்டம்பர் 27) தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், அவர் வருகை தந்தபோது திரண்ட பிரமாண்ட மக்கள் கூட்டம் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குச் சவாலாக அமைந்தது. குறிப்பாக, கரூரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தின்போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசல் காரணமாகத் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கூட்டத்தில் இருந்த சில தொண்டர்கள் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்த திடீர் குழப்பத்தைத் தொடர்ந்து, காயமடைந்த நபர்கள் விரைவாகக் கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

பலி

பலி எண்ணிக்கை

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், பலர் கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு விரைந்து நிலைமையை கண்காணித்து வருகிறார். மேலும், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.விஜயபாஸ்கரும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post