"கோட்டையை கைப்பற்றுவோம்": 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த TVKதொண்டர்களுக்கு விஜய் கட்டளை
செய்தி முன்னோட்டம்
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், இன்று தனது அரசியல் பயணத்தின் மூன்றாவது ஆண்டில் நுழைகிறது. இந்த மைல்கல்லை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கிய தனது தீர்க்கமான இலக்கை வெளிப்படுத்தியுள்ளார். விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் வெற்றிகரமாக நிறைவு செய்து, நமது அரசியல் பயணம் நீள்கிறது. ஒரு முதன்மை அரசியல் சக்தியாக உருவெடுக்கும் முன்பே, நாம் மக்களுடன் மக்களாக நின்று பணியாற்றி வருகிறோம். தமிழக வெற்றிக் கழகம் என்பது எவராலும் விலக்க இயலாத விரிவானம்; சலனங்களுக்கு இடம் கொடுக்காத ஆழ்கடல். இது சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலை மீட்டெடுக்கும் வெற்றிப் போர்முரசம்" என முழங்கினார்.
2026 தேர்தல்
ஆட்சியை கைபற்றுவோம் என சூளுரைத்த விஜய்
"இதுவரை இல்லாத ஒரு புதிய அரசியல் சூழலை 2026 தேர்தல் சுமந்து நிற்கிறது. நமது அரசியல் வருகையே இந்த மாற்றத்திற்குக் காரணம் எனப் பலரும் கூறுகின்றனர். வரும் தேர்தலில் தேர்ந்த தெளிவுடனும், நுட்பமான திட்டங்களுடனும் களமிறங்கி, மக்களின் ஆதரவுடன் ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றும் ஜனநாயக இலக்கை நாம் உறுதியாக வெல்வோம்" என அறிக்கை வழியாக சூளுரைத்தார். விஜய் கட்சி தொடங்கிய போது இருந்த விமர்சனங்களைக் கடந்து, தற்போது ஒரு பலமான அரசியல் சக்தியாகத் தன்னை முன்னிறுத்தி வருகிறார். குறிப்பாக, 2026 தேர்தலில் தவெக-வின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், "வெற்றி நிச்சயம், நல்லதே நடக்கும்" என்ற அவரது வாசகங்கள் தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
— TVK Vijay (@TVKVijayHQ) February 2, 2026
வணக்கம்.
நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.
முதன்மை அரசியல் சக்தியாகப்…