10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! முழு விவரங்கள் இங்கே!
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகளை இன்று (நவம்பர் 4, 2025) அதிகாரபூர்வமாக வெளியிட்டார். பொதுத் தேர்வுகள் அட்டவணை 2026 ப்படி, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2, 2026 தொடங்கி, மார்ச் 24, 2026 நிறைவு பெறும். 11-ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 4, 2026 தொடங்கி மார்ச் 27 முடிவடைகிறது. அதேபோல, 10-ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 நிறைவு பெறும். முழுமையான அட்டவணையைத் dge.tn.gov.inல் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். அனைத்து தேர்வுகளும் காலை 10:00 மணிக்குத்தொடங்கி பகல் 1:15 மணி வரை நடைபெறும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#தகவல்பலகை | 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை ✨#SunNews | #PublicExam | #10thPublicExam | @Anbil_Mahesh pic.twitter.com/pWc51dhmgD
— Sun News (@sunnewstamil) November 4, 2025