LOADING...
3 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: விருது பெறுபவர்கள் பட்டியல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குவார்

3 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: விருது பெறுபவர்கள் பட்டியல்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 24, 2025
12:48 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழக அரசு சார்பில் பல்வேறு கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை வழங்கி வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு 3 சவரன் தங்கப் பதக்கம் மற்றும் ஒரு விருதுப் பட்டயம் வழங்கப்படும். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குவார். இந்த ஆண்டு, 2021, 2022, மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான விருதுகள் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை தவிர சிறப்பு விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாரதியார் விருது (இயல்): முருகேச பாண்டியன் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது (இசை): கே.ஜே. யேசுதாஸ் பாலசரசுவதி விருது (நாட்டியம்): பதஸ்ரீ முத்துகண்ணம்மாள் ஆகியோருக்கு வழங்கப்படும்.

#2021

2021 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

திரைத்துறை: எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர்: சூப்பர் சுப்பராயன், அரங்க அமைப்பாளர் ஜெயகுமார் சின்னத்திரை: நடிகர்: கமலேஷ் இயல்: எழுத்தாளர்: திருநாவுக்கரசு கவிஞர்: நெல்லை ஜெயந்தா சமயச்சொற்பொழிவாளர்:சந்திரசேகர் (எ) தங்கம்பட்டர் இசை: குரலிசை: அசோக் ரமணி, தக்கேசி திருமுறை தேவார இசை:சற்குருநாதன் ஓதுவார் மிருதங்கம்: நரேந்திரன் கோட்டு வாத்தியம்: நரசிம்மன் நாதசுரம்:டி.ஜே.சுப்பிரமணியன், சீனிவாசன் தவில்: சேகர் நாதசுர ஆசிரியர்: பில்லப்பன் நாட்டியம்: பரதநாட்டிய ஆசிரியர்:பழனியப்பன் பரதநாட்டியம்:பிரியா கார்த்திகேயன் நாடகம்: நடிகர்:முருகன் இயக்குநர்:நாராயணன் இசை:அலெக்ஸ் இசை நாடக நடிகர்:விசுவநாதன் கிராமியக் கலைகள்: கிராமியப் பாடகர்:வீர சங்கர் பொய்க்கால் குதிரை ஆட்டம்:காமாட்சி பெரிய மேளம்:முனுசாமி நையாண்டி மேள நாதஸ்வரம்: மருங்கன் வள்ளி ஒயில்கும்மி: கே.கே.சி.பாலு இதர கலைப்பிரிவுகள்: ஓவியர்: ஜவானந்தம்

#2022

2022 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

திரைப்படம்: நடிகர் விக்ரம் பிரபு, நடிகை: ஜெயா.வி.சி.குகநாதன்,பாடலாசிரியர் விவேகா, PRO டைமண்ட் பாபு, புகைப்பட கலைஞர்: லட்சுமி காந்தன் சின்னத்திரை: நடிகை:'மெட்டி ஒலி' காயத்ரி இயல்: எழுத்தாளர்: சாந்தகுமாரி சிவகடாட்சம் இலக்கிய பேச்சாளர்:அப்துல்காதர் சமயச் சொற்பொழிவாளர்: முத்துகணேசன் இசை: குரலிசை:ஜெயஸ்ரீ வைத்தியநாதன், சாரதா ராகவ் வயலின்:பகலா ராமதாஸ் மிருதங்கம்:நாராயணன் நாதசுரம்:எஸ்.ஜி.ஆர்.எஸ்.மோகன் தாஸ், முருகவேல் தவில்:பாபு கதா காலட்சேபம்:சுசித்ரா பாலசுப்பிரமணியன் நாட்டியம்: பரதநாட்டிய ஆசிரியர்:அமுதா தண்டபாணி பாகவத மேளா:சுப்பிரமணிய பாகவதர் பரத நாட்டிய குரலிசை:சுரேஷ் நாடகம்: நடிகர்:பொன் சுந்தரேசன் இயக்குநர்:நன்மாறன் நாடகத் தயாரிப்பாளர்:சோலை ராஜேந்திரன் இசை நாடக நடிகர்:சத்தியராஜ் கிராமியக் கலைகள்: தேவராட்டம்:ரஞ்சிதவேல் பொம்மு பொம்மலாட்டம்:கலைவாணன் தப்பாட்டம்:எம்.எஸ்.சி.ராதாரவி நையாண்டி மேள நாதஸ்வரம்:கே.பாலு இதர கலைப்பிரிவுகள்: பண்பாட்டுக் கலை பரப்புனர்: சாமிநாதன் ஓவியர்: லோகநாதன்

#2023

2023 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

திரைப்படம்: நடிகர்: மணிகண்டன் குணச்சித்திர நடிகர்:ஜார்ஜ் மரியான் இசையமைப்பாளர்: அனிருத் பின்னணிப் பாடகி: ஸ்வேதா மோகன் நடன இயக்குநர்: சாண்டி PRO நிகில் முருகன் சின்னத்திரை: நிகழ்ச்சித் தொகுப்பாளர்: உமா சங்கர் பாபு, அழகன் தமிழ்மணி இயல்: கவிஞர்: ஜீவபாரதி இசை: குரலிசை:காசியப் மகேஷ் வீணை:ஹேமலதாமணி கிளாரினெட்:வே.பிரபு நாதசுரம்:பி.பி.ரவிச்சந்திரன், ஞான நடராஜன், பரமேஸ்வரன் தவில்:ராமஜெயம் பாரதி, ராதாகிருஷ்ணன் நாட்டியம்: பரதநாட்டிய ஆசிரியர்:தனசுந்தரி குச்சுப்பிடி நாட்டியம்:ஜெயப்பிரியா பரதநாட்டியக் குரலிசை:ஹரி பிரசாத் நாடகம்: பழம்பெரும் நாடக நடிகர்:ஜோதிகண்ணன் நாடக நடிகர்:வானதிகதிர்(எ)பெ.கதிர்வேல் விழிப்புணர்வு நாடக நடிகர்:தேவநாதன் இசை நாடக நடிகர்கள்:ஏ.ஆர்.ஏ.கண்ணன், தமிழ்ச்செல்வி கிராமியக் கலைகள்: தெருக்கூத்து:ராமநாதன் வில்லுப்பாட்டு:ஜெகநாதன் நையாண்டி மேள தவில்: மகாமணி கிராமியப் பாடல் ஆய்வாளர்: சந்திரபுஷ்பம் இதர கலைப்பிரிவுகள்: சிற்பி: தீனதயாளன்