Page Loader
காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு, ரூ.404 கோடி ஒதுக்கீடு
தற்போது நடைமுறையில் உள்ள இந்த திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருவதாக கூறப்படுகிறது. அதை மேலும் விரிவாக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு, ரூ.404 கோடி ஒதுக்கீடு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 04, 2023
12:11 pm

செய்தி முன்னோட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின், 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' ஒன்றினை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார். அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வந்தது. இதற்காக, ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கும் நோக்கத்தோடு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்களுக்கு உணவளிக்க, மேலும் ரூ. 404 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இன்று அரசாணை வெளியாகி உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்