திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் - தொழில்துறையில் வெளியான புது அறிவிப்புகள்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இன்று(ஏப்ரல்.,6) தொழில் முதலீட்டு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, திருச்சியில் ரூ.600 கோடி செலவில் டைடல் பார்க் அமைக்கப்படும்.
செய்யாறு சிப்காட் மற்றும் இருங்காட்டுக்கோட்டை தொழில் பூங்காவில் ரூ.20 கோடியில் 2 தங்குமிடம் அமைக்கப்படும்.
மேலும் சிப்காட் பூங்காவில் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்கள் பயனிற்காக ரூ.30 கோடியில் 600 படுக்கைகள் கொண்ட தங்குமிடம் அமைக்கப்படவுள்ளது. மணப்பாறை, தேனி, திண்டிவனம், சூளகிரி ஆகிய சிப்காட்களில் ரூ.20 கோடியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதிரடி அறிவிப்புகள்
நீரின் பயன்பாட்டினை கண்காணிக்க ஸ்மார்ட் நீர் அளவீட்டு அமைப்புகள்
தொடர்ந்து பேசிய அவர், சூளகிரி, தேனி, விருதுநகர் சிப்காட்களில் நிர்வாக அலுவலகம் கட்டப்படும்.
திருவள்ளூர் மாவட்டம் காரணியில் 3000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.100 கோடியில் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
காரைக்குடி மற்றும் ராசிபுரத்தில் மினி டைடல் பார்க் ரூ.70 கோடி செலவில் அமைக்கப்படும். நீர் விரயத்தை கட்டுப்படுத்தி அதன் பயன்பாட்டினை கண்காணிக்க ஸ்மார்ட் நீர் அளவீட்டு அமைப்புகள் சிப்காட்டில் உருவாக்கப்படும்.
டைசல் உயிரின் முகவரி என்னும் பெயரில் சென்னை மற்றும் கோவையில் ரூ.10 கோடி செலவில் புத்தாக்க மையங்கள் அமைக்கப்படும். தொடர்ந்து சேலத்திலும் விரைவில் டைடல் பார்க் அமைக்கப்போவதாக அமைச்சர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.