LOADING...
மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை: பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு
மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை

மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை: பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Dec 15, 2025
08:25 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, 2025-26 ஆம் ஆண்டிற்கான அரையாண்டுத் தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகளைத் தொடர்ந்து, டிசம்பர் 24, 2025 அன்று முதல் அரையாண்டு விடுமுறை ஆரம்பமாகிறது. இந்த விடுமுறைக் காலம் புத்தாண்டு தினமான ஜனவரி 1, 2026 வரை தொடரும். இதன் மூலம், மாணவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு ஆகிய இரண்டு பண்டிகைகளையும் சேர்த்துத் தங்கள் விடுமுறையைக் கொண்டாடலாம்.

அறிவுரை

குறிப்பிட்ட அறிவுரைகள்

விடுமுறை முடிந்து, அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் ஜனவரி 2, 2026 வெள்ளிக்கிழமை அன்று திறக்கப்படும் என்றுப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், மாணவர்களின் அரையாண்டுத் தேர்வு முடிவுகளை சம்பந்தப்பட்டப் பள்ளிகளிலேயே வழங்க வேண்டும் என்றுப் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த விடுமுறைக் காலமானது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் என்றும், இந்த விடுமுறையை முடித்துக் கொண்டுத் திரும்பும் மாணவர்கள் அனைவரும் முழுத் தயாராக கல்வியைத் தொடர வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஜனவரி 2 வெள்ளிக்கிழமை என்பதால், 2, 3, மற்றும் 4 ஆகிய திதிகளிலும் விடுமுறை வழங்கப்பட்டு ஜனவரி 5 பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்த்த மாணவர்களுக்கு இது சற்று சோகத்தைக் கொடுத்துள்ளது.

Advertisement