LOADING...
ஆதரவற்ற முதியோரின் நலவாழ்வை மேம்படுத்த 12 மாவட்டங்களில் 25 அன்புச்சோலை மையங்கள் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
ஆதரவற்ற முதியோரின் நலவாழ்வை மேம்படுத்த 12 மாவட்டங்களில் 25 அன்புச்சோலை மையங்கள் தொடக்கம்

ஆதரவற்ற முதியோரின் நலவாழ்வை மேம்படுத்த 12 மாவட்டங்களில் 25 அன்புச்சோலை மையங்கள் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 10, 2025
05:32 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மூத்த குடிமக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்குடன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட 25 அன்புச் சோலை மையங்களை திங்கட்கிழமை (நவம்பர் 10) திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட முதியோர்களுக்கு அமைதியான, கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக அரசு ஏற்கனவே முதியோர் இல்லங்கள், நடமாடும் மருத்துவ அலகுகள் போன்ற பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த அன்புச் சோலை மையங்கள், முதியோர்கள் பகல் நேரங்களில் சமூக உறவுகளை வளர்த்துக் கொள்ளவும், பாதுகாப்பாகப் பராமரிக்கப்படவும் தொடங்கப்பட்டுள்ளது.

20 மையங்கள்

10 மாநகராட்சிகளில் தலா 2 மையங்கள்

மாநகராட்சிகளில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா இரண்டு வீதம் 20 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை பெருநகர மாநகராட்சியில் 3 மையங்களும், தொழில் மாவட்டங்களான இராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகியவற்றில் தலா ஒரு மையமும் என மொத்தம் 25 அன்புச் சோலைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் முதியோர்களுக்காக இயன்முறை மருத்துவ சேவைகள், யோகா, நூலக வசதி, பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்வுகள் போன்றவை வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் வீட்டில் உள்ள முதியோர்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் நேரத்தைச் செலவிடுவதை உறுதி செய்யலாம்.