Loading...
தமிழகத்தில் நாளை (ஜூலை 29) மின் விநியோகம் நிறுத்தப்படும் முக்கிய இடங்கள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தமிழகத்தில் நாளை (ஜூலை 29) மின் விநியோகம் நிறுத்தப்படும் முக்கிய இடங்கள்

எழுதியவர் Vasuki
Jul 28, 2026
12:59 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை புதன்கிழமை (ஜூலை 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தஞ்சாவூர் மாவட்டம்: காரம்பயம், ஆலத்தூர், பாப்பநாடு.

கடலூர் மாவட்டம்: ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீநெடுஞ்சேரி, ராஜேந்திரபட்டினம், குணமங்கலம், கல்லிப்பாடி, ஊ.மங்கலம், அரசகுழி, இருப்பு, சாத்தமங்கலம், கோபாலபுரம், மேலப்பளையூர், சி.கீரனூர், சிறுவரப்பூர்.

தேனி மாவட்டம்: கம்பம் நகராட்சி பகுதிகள், கூடலூர், பெரியார், உத்தமபுரம், துர்க்கையம்மன் கோவில், ஊத்துக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

அரியலூர் மாவட்டம்: இளந்தைக்கூடம், புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர்.

திண்டுக்கல் மாவட்டம்: கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரங்கநாதபுரம், காசிப்பாளையம் ஆகிய பகுதிகள்.

ADVERTISEMENT