
'தி பாய்ஸ்': வைரல் ஆடியோ மூலம் அம்ரித்பாலுக்கு எச்சரிக்கை விடுத்த பஞ்சாப் போலீஸ்
செய்தி முன்னோட்டம்
தப்பியோடிய காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் தலைமறைவாகி நான்கு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், பஞ்சாப் காவல்துறை இன்று(ஏப்-11) பிரிவினைவாதிகளை எச்சரிக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
அம்ரித்பாலுடன் காவல்துறையினரிடம் இருந்து தப்பிய அவரது நெருங்கிய உதவியாளர் பப்பல்ப்ரீத் சிங்கை நேற்று கைது செய்த பஞ்சாப் போலீஸார், "தி பாய்ஸ்" என்ற பிரபலமான ஆடியோவை பயன்படுத்தி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
"நீங்கள் ஓடலாம், ஆனால் சட்டத்தின் நீண்ட கைகளிடம் இருந்து மறைய முடியாது" என்று அந்த வீடியோவுக்கு தலைப்பிடபட்டிருந்தது.
பப்பல்ப்ரீத் சிங் கைதாவதற்கு முன்பும் கைதான பின்பும் எடுக்கப்பட்ட வீடியோ கிளப்கள் இந்த வீடியோவில் காட்டப்பட்டிருந்தது.
வைரலான 'தி பாய்ஸ்' என்ற எழுத்துக்களுக்கு பதிலாக இந்த வீடியோவில் "தி பஞ்சாப் போலீஸ்" என்று போடப்பட்டிருந்தது.
ட்விட்டர் அஞ்சல்
பஞ்சாப் காவல்துறை இன்று வெளியிட்ட வீடியோ
"You can run, but you can't hide from the long arm of the law"
— Punjab Police India (@PunjabPoliceInd) April 11, 2023
Punjab Police #arrested Papalpreet Singh, main associate of #AmritpalSingh
We urge citizens to maintain peace & harmony in the region pic.twitter.com/M63Er0LNuP