LOADING...
மே 13, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு: கோவை மகளிர் நீதிமன்றம் அறிவிப்பு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

மே 13, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு: கோவை மகளிர் நீதிமன்றம் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 28, 2025
05:42 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு முழுவதையும் அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பலரும் எதிர்பார்த்த அந்த தீர்ப்பு நாளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வரும் மே 13-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சி காலத்தில் வெளிச்சத்திற்கு வந்த இந்த வழக்கு, தமிழக மக்களிடம் பெரும் சோகத்தையும் கோபத்தையும் ஒருசேர ஏற்படுத்தியது. பல இளம் பெண்களை மிரட்டி, ஆபாசம் படம் எடுத்து பின்னர் வலைவீசி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்தன. இந்த வழக்கில் 9 பேரை சிபிஐ கைது செய்தது தனது விசாரணையை தொடங்கிய நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கும் நாளை நெருங்கியுள்ளது வழக்கு.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வழக்கு

தீவிர தேடுதலுக்கு பின்னர் வழக்கில் தொடர்புடைய 9 பேர் கைது

தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வழக்கு CBI-யால் விசாரிக்கப்பட்டது. இது தொடர்பாக சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ்குமார், வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரேன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து குற்ற பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளது. அரசு சார்பில் 50 சாட்சியங்கள், 200 ஆவணங்கள், 40-க்கும் மேற்பட்ட மின்னணு ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. வழக்கில் அனைத்து தரப்புகளின் வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிமன்றம் மே 13 அன்று தீர்ப்பு வழங்கும் என அறிவித்துள்ளது. இந்த வழக்கில் சிலர் அதிமுக கட்சியினருடன் தொடர்புடையவர்கள் என்பதாலேயே இது அரசியல் சர்ச்சையாகவும் பரவலாக பேசப்பட்டது.