
கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் கைது
செய்தி முன்னோட்டம்
கோவை ரத்தினபுரி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து ரத்தினபுரி காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது காரமடை பகுதியை சேர்ந்த சந்திரபாபு(33) என்பவரிடமிருந்து 1.2கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஆந்திராவில் இருந்து அவர் கஞ்சா கடத்தி, இங்கு பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சந்திரபாபு வீட்டின் அருகே 7 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து உள்ளூரில் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து மொத்தம் 8.2கிலோ கஞ்சா மற்றும் ஓர் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக சந்திரபாபு அளித்த தகவலையடுத்து 8பேரை போலீசார் கைதுசெய்தனர்.
பரபரப்பு சம்பவம்
பணிமாற்றம் ஆனபிறகும் கஞ்சா கும்பலிடம் தொடர்ந்து லஞ்சம் வாங்கிய மகேந்திரன்
தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஈரோடு மாவட்டம் சைபர்கிரைம் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் மகேந்திரன் (35) என்பவர் கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கிகொண்டு கஞ்சா விற்பனை பின்னணியில் இருந்து வந்துள்ளார்.
மகேந்திரன் கடந்த 2018ம்ஆண்டு முதல் 2020ம்ஆண்டு வரை கோவை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.
அப்பொழுது அவர் கஞ்சா கும்பலிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு கஞ்சா விற்பனையில் உடந்தையாக இருந்துள்ளார்.
ஈரோட்டிற்கு பணிமாற்றம் செய்தபிறகும் தொடர்ந்து அவர் கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கி வந்துள்ளார் என்று தெரியந்துள்ளது.
அவர்கள் கூறியதை உறுதிப்படுத்திய பட்சத்தில் போலீசார் தற்போது மகேந்திரனை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.