
வேலுநாச்சியாருக்கு புகழாரம்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
செய்தி முன்னோட்டம்
சுதந்திர போராட்ட வீரர் வேலு நாச்சியாரின் 293வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
வேலு நாச்சியார் 18ஆம் நூற்றாண்டில் சிவங்கையை ஆட்சி செய்தவர்.
சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சில பெண் போராளிகளில் வேலு நாச்சியாரும் ஒருவர் ஆவார்.
தன் ட்விட்டர் பதிவில் வேலு நாச்சியாரின் பெருமைகளை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, அவருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் கூறி இருக்கிறார்.
ட்விட்டரில் பிரதமர் மோடி கூறி இருப்பதாவது:
ஆங்கிலேய அரசை எதிர்த்து தீவிரமாக போராடியவர் வேலு நாச்சியார்.
விடுதலைக்காக போராடியது மட்டுமல்லாமல் சமூக நன்மைக்காகவும் அவர் போராடி இருக்கிறார்.
அவரது தீரம் தலைமுறை தாண்டி வாழும் என்று கூறி இருக்கிறார்.
ட்விட்டர் அஞ்சல்
பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவு:
வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி. தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார். காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார். அவரது தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்.
— Narendra Modi (@narendramodi) January 3, 2023