LOADING...
2047 இல் விக்சித் பாரத்தை அடைய உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்
உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

2047 இல் விக்சித் பாரத்தை அடைய உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 22, 2025
07:32 pm

செய்தி முன்னோட்டம்

புதிய தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், சேமிப்பை அதிகரித்து சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நேரடியாகப் பயன் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். நாட்டின் மக்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், இந்த சீர்திருத்தங்கள் ஜிஎஸ்டி பச்சத் உத்ஸவ் (ஜிஎஸ்டி சேமிப்பு விழா) என்ற புதிய தொடக்கத்தை அறிவிப்பதாகக் கூறினார். புதிய சீர்திருத்தங்கள் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி விகிதங்களைக் கொண்டுள்ளன. உணவுப் பொருட்கள், மருந்துகள், சோப்பு மற்றும் பற்பசை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இப்போது வரி விலக்கு பெற்றவை அல்லது 5% வரி அடுக்குகளில் வரும் என்று பிரதமர் தெரிவித்தார்.

வளர்ச்சி

வளர்ச்சி மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் என நம்பிக்கை

முன்னதாக 12% வரி விதிக்கப்பட்ட பல பொருட்கள் இப்போது 5% பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றம், ஒவ்வொரு மாநிலத்திலும் வளர்ச்சியையும் முதலீட்டையும் ஊக்குவிக்கும் என்றும் கூறினார். தனது அரசின் பொருளாதார சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், கடந்த சில ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். வருமான வரி குறைப்பு மற்றும் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்கு ₹2.5 லட்சம் கோடி சேமிக்க உதவும், மேலும் அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற இது உதவும் என்றும் கூறினார்.

சுயசார்பு

சுயசார்பு மற்றும் விக்சித் பாரத்

மேலும், பிரதமர் மோடி பொருளாதார சுயசார்புக்கான வேண்டுகோளையும் விடுத்தார். விக்சித் பாரத் என்ற கனவை 2047 க்குள் அடைய, மேட் இன் இந்தியா தயாரிப்புகளை ஆதரிப்பது முக்கியம் என்று கூறினார். இந்திய கைவினைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு உதவும் வகையில் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குமாறும் விற்பனை செய்யுமாறும் அவர் வணிகர்களைக் கேட்டுக்கொண்டார்.