சென்னையில் செயல்படும் ஹோட்டல் குழம்பில் காகிதங்கள்-6 பேருக்கு வாந்தி, மயக்கம்
சென்னை தி.நகரில் விருதுநகர் அய்யனார் உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று(ஜூலை.,31)மதியவேளையில் ஐடி.,துறையில் பணிபுரியும் பெண் உள்பட 15 பேர் சாப்பிட வந்துள்ளனர். சிக்கன், மட்டன் உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்ட இவர்களுள் 6 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் புகாரித்துள்ளனர். அதன்பேரில், அங்குவந்த அதிகாரிகள் உணவுகள், உணவு தயாரிக்கும் கூடம் என அனைத்து இடங்களிலும் ஆய்வுச்செய்தனர். இதில் 12கி.,கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு, உணவகத்திலிருந்த குழம்பினை அதிகாரிகள் ஆய்வுச்செய்த பொழுது அதில் காகிதங்கள் இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து உணவு பாதுகாப்பு சட்டம் 55-பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கியதோடு, உணவகத்திற்கு சீல் வைத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.