Loading...
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் கிரானா ஹில்ஸ் மீது இந்தியா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதா? புதிய தகவல்
பாகிஸ்தானின் கிரானா ஹில்ஸ் மீதான தாக்குதல் குறித்து முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் விளக்கம்

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் கிரானா ஹில்ஸ் மீது இந்தியா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதா? புதிய தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 26, 2026
07:42 am

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானின் முக்கிய அணு ஆயுதக் கிடங்காகக் கருதப்படும் கிரானா ஹில்ஸ் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது இந்திய வெடிமருந்து ட்ரோன் விழுந்து வெடித்தது. இருப்பினும், இது தற்செயலாகவும் தவறுதலாகவும் நிகழ்ந்த ஒன்றே தவிர, இந்தியா திட்டமிட்டு அந்த அணு ஆயுத மையத்தைத் தாக்கவில்லை என்று நாட்டின் முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைமை தளபதி (Ex-CDS) ஜெனரல் அனில் சவுகான் தெளிவுபடுத்தியுள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

இலக்கு

2 மணி நேரப் பறக்கும் காலம் மற்றும் ரேடார் தேடல் இலக்கு

டெல்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய அனில் சவுகான், சர்கோதா விமான தளத்தை சுற்றியுள்ள பாகிஸ்தானின் ரேடார் அமைப்புகளைக் கண்டறிந்து அழிப்பதற்காக இஸ்ரேலிய வடிவமைப்பிலான ஹரோப் ரக ஆளில்லா வெடிமருந்து ட்ரோன்களை இந்தியா அனுப்பியதாகத் தெரிவித்தார்.

சுமார் 2 மணி நேரம் மட்டுமே பறக்கும் திறன் கொண்ட இந்த ட்ரோன்கள், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ரேடார் இலக்கைக் கண்டறியத் தவறியதால், எரிபொருள் தீர்ந்து சர்கோதாவிற்கு 10 கிமீ தொலைவில் உள்ள கிரானா ஹில்ஸ் குன்றுகளில் ஒன்றின் மீது விழுந்து வெடித்ததாகக் குறிப்பிட்டார்.

திருப்பம்

ஸ்கார்டு தாக்குதல் மாற்றம் மற்றும் போக்கின் திருப்பம்

ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஸ்கார்டு விமானத் தளத்தைத் தாக்க இந்திய விமானப் படைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக சவுகான் வெளிப்படுத்தினார்.

ஆனால், அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக கடைசி நேரத்தில் இலக்கு போலாரி தளத்திற்கு மாற்றப்பட்டது.

பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த போதிலும், தாக்குதலின் கடைசிப் புள்ளியையும் வெற்றியையும் இந்தியா மட்டுமே தீர்மானிக்கும் என்பதில் உறுதியாக இருந்ததாக அவர் கூறினார்.

ADVERTISEMENT

படங்கள்

செயற்கைக்கோள் படங்களை ஆதாரமாகப் பெற முடியாத பாகிஸ்தான்

தாக்குதலின் போது ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட பாகிஸ்தான் சீனா மற்றும் அமெரிக்காவின் வணிகரீதியான செயற்கைக்கோள் படங்களைப் பெற முயன்ற போதிலும், அவர்களால் எந்த ஆதாரத்தையும் பெற முடியவில்லை என அனில் சவுகான் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு தாக்குதலின் போதும் பழைய ராணுவ உத்திகளை மீண்டும் பயன்படுத்தாமல், புதிய உத்திகளைக் கையாண்டதே ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக அமையக் காரணம் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

ADVERTISEMENT