லாரியில் பயணம் செய்து ஓட்டுனர்கள் பிரச்சனையினை கேட்டறிந்த ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி சமீபத்திய காலங்களில் அதிகளவில் வெவ்வேறு வகையிலான பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அதன்படி அரியானா மாநிலத்தில் உள்ள முர்தால் நகரில் இருந்து அம்பாலா நகருக்கு ஒரு லாரியில் பயணம் செய்துள்ளார். இரவு 11மணியளவில் ராகுல்காந்தி இந்த பயணத்தினை துவங்கி நள்ளிரவு முழுவதும் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுடன் உரையாடிக்கொண்டே சென்றுள்ளார். வழிப்பயணங்களின் பொழுது அவர்கள் சந்திக்கும் இடர்கள் மற்றும் பிரச்சனைகள் என்ன?,அதனை அவர்கள் எவ்வாறு கையாளுகிறார்கள்? என்பதை பற்றி அவர்களிடம் இவர் கேட்டறிந்துள்ளார். பின்னர் ராகுல் காந்தி அம்பாலா பகுதியிலிருந்து சாலை மார்க்கமாக இமாச்சல்பிரதேசம் சென்றார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இவரின் இந்த பயணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோப்பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.