Page Loader
ஜூன் 9 பதவி ஏற்க போகிறாரா பிரதமர் மோடி? பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள் யார்?
வரும் ஜூன் 9 அவர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

ஜூன் 9 பதவி ஏற்க போகிறாரா பிரதமர் மோடி? பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள் யார்?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 06, 2024
01:33 pm

செய்தி முன்னோட்டம்

மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை நேற்று தெரிவித்தனர். அதோடு, NDA கூட்டணியின் தலைவராகவும் அவரை ஒருமனதாக தேர்வு செய்வதாக அவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில், வரும் ஜூன் 9 அவர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பிரதமர் மோடி, ஜூன் 8 பதவி ஏற்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மாற்று தேதி பற்றி செய்தி வெளியாகியுள்ளது. இந்த பதவியேற்பு விழாவில். இந்திய அரசின் "அண்டை நாடுகளுக்கு முதலில்" கொள்கையை பிரதிபலிக்கும் வகையில், தெற்காசிய நாடுளின் முக்கிய தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு பிரமுகர்கள்

விக்கிரமசிங்க, ஷேக் ஹசீனா அழைப்பை ஏற்றுக்கொண்டனர்

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை தலைவர்கள் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளனர். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பை ஏற்று மோடியின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாக அவரது அலுவலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மோடிக்கு வாழ்த்து தெரிவித்த முதல் வெளிநாட்டு தலைவர்களில் ஒருவரான வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வெள்ளிக்கிழமை டெல்லி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் விருந்தினர்கள்

மற்ற தெற்காசிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

மோடியின் பதவியேற்பு விழாவுக்கான முறையான அழைப்பிதழ்கள், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் "பிரசந்தா," பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளில், பாரதிய ஜனதா கட்சி - 240 இடங்களுடன் - எதிர்கட்சிகளின் வியக்கத்தக்க வலுவான எண்ணிக்கைக்கு எதிராக கருத்து கணிப்புகளை பொய்யாக்கியது. தனிப்பெரும்பான்மையைப் பெற முடியாமல் போனதால், பாஜக தனது கூட்டணி காட்சிகளை நம்பி ஆட்சி அமைக்க உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையை எட்டியுள்ளது.