தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு!
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று சென்னையில் ECR பகுதியில் மித மழை பெய்த நிலையில் இன்று காலை முதல் சென்னை நகரம் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. "வட கடலோர தமிழகம் மற்றும் தெற்கு கடலோர தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மாலை / இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையிலான சில இடங்களில் இன்று மிதமானது முதல் லேசானது வரை பலத்த மழை பெய்யக்கூடும். நாளை முதல் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்" என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Parts of North Coastal TN & South Coastal TN and parts of Delta districts may see late thunderstorm actiity later in the evening / night today under the influence of wind convergence prevailing over the region. Few places between Chennai and Pondicherry may see moderate to… pic.twitter.com/NVcVovIagj
— Chennai Rains (COMK) (@ChennaiRains) November 4, 2025
வானிலை
வானிலை நிலவரம்
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது என IMD தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாநிலத்தின் வட மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் மழை பொழிவு அதிகமாக இருக்கலாம். குறிப்பாக, சில உள் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.