LOADING...
தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமழை நீடிக்கும்

தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 13, 2025
09:00 am

செய்தி முன்னோட்டம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழை இன்றும் (நவம்பர் 13, 2025) தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழைக் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான முதல் கனமழை வரை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் மதத்துக்குளத்தில் தலா 6 செ.மீ., மதுரை மாவட்டம் எருமலையில் 5 செ.மீ., விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னை

சென்னை வானிலை

வங்கக்கடலின் தென் மேற்குப் பகுதியிலும், தென் கிழக்குப் பகுதியிலும் காற்றழுத்த நிலை உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால், இன்று மற்றும் நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் பகுதி அளவில் மேகமூட்டத்துடன் இருந்து, சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றின் வேகம் 55 கி.மீ. வரை வீச வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.