Page Loader
மயிலாடுதுறையில் விஷ வண்டு தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி 
மயிலாடுதுறையில் விஷ வண்டு தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

மயிலாடுதுறையில் விஷ வண்டு தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி 

எழுதியவர் Nivetha P
Sep 02, 2023
06:50 pm

செய்தி முன்னோட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், அவர் அந்த குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தினை சேர்ந்த 80-ராதா நல்லூர் கிராமத்திலுள்ள அய்யனார் கோயில் தெருவில் வசித்து வருபவர் வீரமணி தபெ. செண்டாய். இவர் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி திருக்கடையூர் என்னும் கிராமத்தில் மாங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அவரை கதண்டு என்னும் வகையினை சேர்ந்த விஷ தன்மை அதிகமுள்ள வண்டுகள் தாக்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

நிதி 

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நபர் மரணம் 

மேலும் அந்த செய்தி குறிப்பில், வண்டுகள் தாக்கியதில் காயமடைந்த அந்த நபருக்கு திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து முதலுதவி செய்யப்பட்டு, பின்னர் அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று(செப்.,2) காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இதனை கேட்டு மிகவும் வேதனையுற்றேன் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவர், "உயிரிழந்த வீரமணி குடும்பத்தாருக்கும் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆதரவையும் தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.