Page Loader
குடியரசு தலைவரின் ஜி20 விருந்திற்கு மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படவில்லை - பா.சிதம்பரம் கண்டனம் 
குடியரசு தலைவரின் ஜி20 விருந்திற்கு மல்லிகார்ஜுனே அழைக்கப்படவில்லை - பா.சிதம்பரம் கண்டனம்

குடியரசு தலைவரின் ஜி20 விருந்திற்கு மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படவில்லை - பா.சிதம்பரம் கண்டனம் 

எழுதியவர் Nivetha P
Sep 09, 2023
01:25 pm

செய்தி முன்னோட்டம்

ஜி20 மாநாடு இந்தாண்டு இந்தியா தலைமையில் நடக்கும் நிலையில், இதன் 18வது உச்சி மாநாடு இன்றும், நாளையும் டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தலைமையில் இன்று(செப்.,9)இரவு விருந்து அளிக்கப்படுகிறது. இதற்கு நாட்டின் முக்கிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் என பலருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

கண்டனம் 

எதிர்க்கட்சி இல்லாத நாட்டில் தான் இவ்வாறு நடக்கும் - பா.சிதம்பரம் 

இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு எம்.பி. பா.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், உலக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இந்திய அரசு அளிக்கும் விருந்திற்கு எந்த ஜனநாயக நாட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவரை அழைக்காததை என்னால் கற்பனையிலும் எண்ணி பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர், "ஜனநாயகம் இல்லாத அல்லது எதிர்க்கட்சி இல்லாத நாட்டில் மட்டுமே இது போன்று நிகழும். ஆனால் இந்தியா ஜனநாயகம் மற்றும் எதிர்க்கட்சி இல்லாத நிலையினை இன்னும் எட்டவில்லை என்று நான் நம்புகிறேன்" என்று பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.