இலங்கை கடற்படை கைது செய்த 12 மீனவர்களை விடுதலை செய்ய கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 12 மீனவர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கடந்த 5ம்தேதி இலங்கை கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவரது கவனத்திற்கு கொண்டுசெல்ல முயற்சிப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த போக்கினை இலங்கைஅரசிடம் எடுத்துக்கூறி இதனை கட்டுப்படுத்தவும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு நடவடிக்கையினை மத்திய அரசு எடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல் இலங்கைஅரசின் வசம் உள்ள 109 படகுகளையும், 12மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.