ஹார்முஸ் வழியாக இந்திய கொடியிடப்பட்ட எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக கடக்க ஈரான் அனுமதி
செய்தி முன்னோட்டம்
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக இந்தியக் கொடியிடப்பட்ட எண்ணெய் டேங்கர் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
ஈரான்
முக்கிய கடல்வழிப் பாதை
உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் ஹார்முஸ் ஜலசந்தி மிக முக்கியமான ஒரு கடல்வழிப் பாதையாகும், இதன் வழியாகவே இந்தியாவின் பெரும்பான்மையான எரிசக்தி இறக்குமதிகள் நடைபெறுகின்றன. அமெரிக்கா மற்றும் ஈரான் மோதல்கள் காரணமாக இந்தக் கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த நிலையில், இந்தியாவின் ராஜதந்திர ரீதியிலான தலையீடு ஒரு பெரிய நிம்மதியை அளித்துள்ளது. இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக ஈரான் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது, இது சர்வதேச வர்த்தகம் தடையின்றி நடைபெற வழிவகுக்கும்.