LOADING...
வங்கக் கடலில் இந்தியா-சீனா இடையிலான ஆடுபுலி ஆட்டம்: ஏவுகணை சோதனையை குறிவைக்கும் சீன உளவுக் கப்பல்கள்
வங்கக் கடலில் இந்தியா-சீனா இடையிலான ஆடுபுலி ஆட்டம்

வங்கக் கடலில் இந்தியா-சீனா இடையிலான ஆடுபுலி ஆட்டம்: ஏவுகணை சோதனையை குறிவைக்கும் சீன உளவுக் கப்பல்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 20, 2025
10:56 am

செய்தி முன்னோட்டம்

வங்கக் கடலில் கடந்த சில வாரங்களாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு தீவிரமான ஆடுபுலி ஆட்டம் விளையாட்டு நடைபெற்று வருகிறது. இந்தியா தனது அதிநவீன ஏவுகணைகளைச் சோதிக்கத் திட்டமிடும் போதெல்லாம், சீன உளவுக் கப்பல்கள் அந்தப் பகுதியில் ஊடுருவுவதும், அதற்குப் பதிலடியாக இந்தியா தனது சோதனைகளைத் தள்ளிவைப்பதும் அல்லது ரத்து செய்வதும் தொடர்கதையாகி உள்ளது.

அறிவிப்புகள்

தொடர் அறிவிப்புகளும் ரத்துகளும்

டிசம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து இந்தியா மூன்று முறை விமானிகளுக்கான எச்சரிக்கை அறிவிப்புகளை (NOTAM) வெளியிட்டு, பின்னர் அவற்றை ரத்து செய்துள்ளது. முதலில் டிசம்பர் 1-4 தேதிகளில் சுமார் 3,500 கிமீ தூரத்திற்கு ஒரு பெரிய தடை மண்டலத்தை இந்தியா அறிவித்தது. இது அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய K-4 ரக நீர்மூழ்கி ஏவுகணையின் சோதனையாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. இருப்பினும், சீன உளவுக் கப்பல்களின் வருகையால் இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. பின்னர் டிசம்பர் 17-20 தேதிகளுக்கான அறிவிப்பும் இதேபோல் திரும்பப் பெறப்பட்டது.

உத்தி

சீனாவின் உளவுக் கப்பல்கள் மற்றும் இந்தியாவின் உத்தி

தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஷி யான் 6 (Shi Yan 6), லான் ஹாய் 101 (Lan Hai 101) உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட சீன ஆராய்ச்சி மற்றும் உளவுக் கப்பல்கள் நடமாடி வருகின்றன. இந்தக் கப்பல்கள் ஏவுகணைகளின் பறக்கும் பாதை, வேகம் மற்றும் அதிர்வுத் தரவுகளைச் சேகரிக்கும் திறன் கொண்டவையாகும். இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்ப ரகசியங்களைச் சீனா திருடுவதைத் தவிர்க்கவே இந்தியா தனது சோதனைகளைத் தள்ளிவைப்பதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதே சமயம், சீனாவின் எதிர்வினை நேரத்தையும் அவர்களின் கண்காணிப்பு முறையையும் ஆராய இந்தியா இத்தகைய "பொய் அறிவிப்புகளை" (Baiting) வெளியிடுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

Advertisement

முக்கியத்துவம்

தற்போதைய நிலை மற்றும் முக்கியத்துவம்

கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி, இந்தியா டிசம்பர் 22 முதல் 24 வரை மற்றொரு ஏவுகணை சோதனைக்காக 3,240 கிமீ தூரத்திற்குப் புதிய NOTAM அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது ஸ்ட்ரைக் (Second Strike) திறனை உறுதிப்படுத்தும் K-series ஏவுகணைகளின் சோதனையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிராந்தியப் பாதுகாப்பில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும், தனது தற்காப்புத் திறனை மேம்படுத்தவும் இந்தியா மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகள் சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.

Advertisement