பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம்
பி.எம்.கிசான் பயனாளிகளுக்கு தமிழக அரசு ஓர் புதிய செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, "பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி" திட்டமானது 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், சொந்தமாக வைத்துள்ள விவசாயிகளுக்கு உதவித்தொகையாக 4மாதத்திற்கு ஒரு முறை ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 12 தவணைகளை இந்த கிசான் பயனாளர்கள் பெற்றுள்ளார்கள். இதனையடுத்து இம்மாத இறுதியில் 13வது தவணையை அளிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பி.எம்.கிசான் வலைத்தளத்தில் ஆதார் எண்ணை உறுதிசெய்த (e-KYC), வங்கிக்கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பயனாளிகளுக்கு மட்டுமே என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்ற பயனாளிகளில் 8,84,120 பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணை இன்னும் உறுதி செய்யாமல் இருந்தது தெரியவந்தது.
வேளாண் உழவர் நலத்துறை மேற்கொண்ட தீவிர நடவடிக்கை - 5,27,934 பயனாளிகளின் ஆதார் எண் உறுதி
இதனை தொடர்ந்து, வேளாண்மை உழவர் நலத் துறையானது கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அஞ்சல்துறை மற்றும் பொதுசேவை மையத்துடன் இணைந்து கிராமம் வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதோடு, வீடுவீடாக சென்று ஆதார்எண்ணை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையின் பயனாக 5,27,934 தகுதியான பயனாளிகளின் ஆதார்எண் உறுதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 3,56,186 தகுதியான பயனாளிகளுக்கும் ஆதார் எண் உறுதி செய்ய பணி வேளாண்மை-உழவர் நலத்துறை அலுவலர்கள் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது வருகிறது. இது தொடர்பாக சந்தேகம் ஏதும் இருந்தால், உங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குனரை அணுகலாம் என்றும் தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் உள்ளது.