அடுத்த செய்திக் கட்டுரை
முதன்முதலாக வந்த பேருந்து சேவை - கொண்டாட்டத்தில் பழங்குடி மக்கள்
எழுதியவர்
Nivetha P
Apr 17, 2023
06:18 pm
செய்தி முன்னோட்டம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள செம்மனாரை கிராம பழங்குடி மக்கள் பேருந்து வசதி இல்லாமல் இருந்துள்ளனர் .
இங்குள்ள மக்களும் பல ஆண்டுகளாக போக்குவரத்திற்கான வசதிகள் ஏதுமின்றி பல கிலோ மீட்டர்கள் நடந்தே சென்றுள்ளனர் .
இந்நிலையில் இப்பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகள் அண்மையில் நடைபெற்றது.
அதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது அந்த கிராமத்திற்கு பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பேருந்து சேவை இந்த செம்மனாரை பழங்குடி கிராமத்திற்கு துவங்கப்பட்டு, முதன்முதலாக பேருந்தும் அவ்வழியாக வந்தது.
தங்கள் கிராமத்தில் முதல்முறையாக பேருந்தினை கண்ட கிராம மக்கள் மகிழ்ச்சியில் தங்கள் பாரம்பரிய இசையினை முழங்கி, நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.