
160 வகையான பறவைகள் வலம் வரும் மதுரை சாமநத்தம் கண்மாய் சரணாலயமாக அறிவிக்க முயற்சி
செய்தி முன்னோட்டம்
மதுரையில் இருந்து 7கிமீ., தொலைவில் மதுரை-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள விரகனூர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது இந்த சாமநத்தம் கண்மாய்.
ஆண்டுமுழுவதும் பறவைகள் இங்குவந்து தங்கி இனப்பெருக்கம் செய்து திரும்புகிறது.
அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு பறவைகளும் இந்த கண்மாய்க்கு வலசை வந்துசெல்கிறது.
எனினும் இந்த கண்மாயையும், இங்கு வந்துசெல்லும் பறவைகளையும் பாதுகாக்க வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்னர் கருவேலமரங்கள் அழிப்பு போர்வையில் இந்த கண்மாய்க்கு வரும் பறவைகள் வரத்து குறையவில்லை.
இதனையடுத்து பறவையியல் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பில் இங்கு 160 வகை பறவைகள் வலசை வந்துசெல்கிறது என தெரியவந்துள்ளது.
இதனால் இந்த கண்மாயை பறவைகள் சரணாலயமாக மாற்றியமைத்து அறிவிக்க சிலஆண்டுகளாக பறவையியல் ஆர்வலர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
ட்விட்டர் அஞ்சல்
160 வகையான பறவைகள் வலம் வரும் மதுரை சாமநத்தம் கண்மாய்
160 வகை பறவைகள் வலசை வரும் மதுரை சாமநத்தம் கண்மாய் ‘சரணாலயம்’ ஆக அறிவிக்கப்படுமா #Madurai | #Birdsanctuary | #BirdsWatching | #MaduraiSamanatham | #Santuaryhttps://t.co/ArfY8XSTBd
— Tamil The Hindu (@TamilTheHindu) February 21, 2023