
வைரலாகும் டிஸ்கவரி டிவி தொகுப்பாளர் மற்றும் பத்திரிக்கையாளருமான அலெக்ஸ் அவுத்வைட் ட்விட்டர் பதிவு
செய்தி முன்னோட்டம்
டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் தொகுப்பாளாராக பல நிகழ்வுகளில் பங்குபெறுபவர் அலெக்ஸ் அவுத்வைட்.
இவர் தொகுப்பாளராக மட்டுமில்லாமல் பத்திரிக்கையாளராகவும் இருந்து வருகிறார்.
இவர் பல இடங்களுக்கு பயணித்து பல்வேறு பழக்கவழக்கம் கொண்ட மனிதர்களை சந்திப்பதில் ஆர்வமுடையவர்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் 'மேக்கிங் பிரண்ட்ஸ் இன் தமிழ்நாடு' என்னும் தலைப்பில் ஓர் வீடியோவினை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் தமிழகத்தில் உள்ள ஓர் வயதான பாட்டி அலெக்ஸ் அவுத்வைட்டிற்கு பூ வைத்துவிடுகிறார்.
மேலும் அவர் தனக்குத்தெரிந்த ஆங்கிலத்தில் 'திஸ் இஸ் ரோஸ்' என்று அந்த பூக்களின் பெயர்களையும் அவரிடம் சொல்கிறார்.
அலெக்ஸ் அவுத்வைட்'டும் புன்னகையுடன் தலையில் பூவை வைத்துக்கொள்கிறார்.
இந்த வீடியோ பதிவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகும் டிஸ்கவரி டிவி தொகுப்பாளர் அலெக்ஸ் அவுத்வைட் ட்விட்டர் பதிவு
Making friends in Tamil Nadu 🇮🇳 pic.twitter.com/x2C1OrvFLQ
— Alex Outhwaite (@AlexOuthwaite) February 14, 2023