டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி - மகளிர் ஆணையத்தலைவர் 15கிமீ., காரில் இழுத்துச்செல்லப்பட்ட கொடுமை
டெல்லி மகளிர் ஆணைய தலைவராக இருந்து வருபவர் ஸ்வாதி மாலிவால், இவர் எய்ம்ஸ் மருத்துவமனை எதிரே இன்று அதிகாலை 3 மணியளவில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் இவரை 10-15 கிமீ தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டுள்ளார். இது குறித்து ஸ்வாதி தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்றிரவு டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்ய சென்றேன். அப்போது அங்கு குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநர், என்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டான். அவனை பிடிக்க முயன்ற பொழுது எனது கையை கார் ஜன்னலில் சிக்க வைத்து அப்படியே இழுத்து சென்றான் என்று மேற்கூறியவாறு பதிவு செய்துள்ளார்.
குடிபோதையில் கார் ஒட்டிய நபர் கைது
மேலும், கடவுள் தான் தன்னை காப்பாற்றியதாக கூறிய அவர், டெல்லியில் மகளிர் ஆணைய தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்னும் பொழுது, மக்கள் நிலைமையை நினைத்துபாருங்கள் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து காவல்அதிகாரி ஒருவர் கூறுகையில், குடிபோதையில் இருந்த அந்த கார் ஓட்டுநர் ஹரிஷ்சந்திராவை(47) கைது செய்துள்ளதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் டெல்லி கஞ்சவாலா பகுதியில் அஞ்சலிசிங் என்னும் பெண் இருசக்கரத்தில் வரும் பொழுது, காரில்சிக்கி கிட்டத்தட்ட 12கிமீ இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தசம்பவம் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கேள்விகளை எழுப்பிய ஸ்வாதி மாலிவாலுக்கே தற்போது அதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.