டெல்லியில் குறைந்த பட்சவெப்பநிலை 1.4ஆக பதிவு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் கடந்த சில நாட்களாக கடும் குளிரினை எதிர்கொண்டு வருகிறார்கள். அடுத்த மூன்று நாட்களுக்கு குளிர் அலை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து தெரிவித்த நிலையில், நேற்று டெல்லி சஃப்தர்ஜங்கில் 1.4 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாகவே டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரிக்கு குறைந்துள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை 4.7 டிகிரி செல்ஸியாசாகவும், சனிக்கிழமை 10.2 டிகிரி செல்ஸியாசாகவும் பதிவாகியது. இதனை தொடர்ந்து டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா, சண்டிகர், உத்திரப்பிரேதேசம், ராஜஸ்தான் போன்ற இடங்களில் மைனஸ் 2.5டிகிரியும், சிகாரில் மைனஸ் 2டிகிரியும், அல்வாரில் 0டிகிரியும், ஹரியானா ஹிசார் நகரில் 0.8டிகிரியும் பதிவாகியுள்ளது என்று அறிக்கைகள் தெரிவிக்கிறது.
குளிர் அலை வீசுவது குறித்து வானிலை ஆய்வு மையம் கணிப்பு
முன்னதாக, இமயமலையில் நாட்டின் வடமேற்கு சமநிலையில் குளிர் அலை வீச வாய்ப்புள்ளது என்பதால் வடமாநிலங்களின் பல பகுதிகளில் வரும் இரண்டு நாட்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் வடமேற்கு மற்றும் அதையொட்டியுள்ள மத்திய இந்தியாவில் 2-4 வரை வெப்பநிலை குறையும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கடும் குளிர் காரணமாக டெல்லியில் காற்று மாசுபாடும் மிக மோசமான நிலையில் உள்ளது. காற்றின் தர குறியீடு 337ஐ தொட்டுள்ளதோடு, மோசமான நிலையே தற்போது வரை உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.