Loading...
டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு: 400 பேர் கொண்ட குழுவுடன் சீனா அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகிறார்
செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சீனா அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகிறார்

டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு: 400 பேர் கொண்ட குழுவுடன் சீனா அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகிறார்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 25, 2026
05:54 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் வரவிருக்கும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் 400 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ குழுவுடன் இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். கடந்த 2019-ஆம் ஆண்டிற்கு பிறகு சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 2019-இல் 200-க்கும் குறைவான அதிகாரிகளுடன் வந்திருந்த நிலையில், இந்த முறை 400 அதிகாரிகள் கொண்ட பிரம்மாண்ட குழுவுடன் அவர் வருகை தருவது இரு நாடுகளுக்கிடையேயான உறவில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

சீனா ஆதரவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

சீன அதிகாரிகள் தங்குவதற்கான விடுதிகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை இறுதி செய்யும் பணிகளில் இந்திய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டை தலைமை தாங்கி நடத்தும் இந்தியாவிற்கு முழு ஆதரவு அளிப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, எல்லைப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

எல்லைப் பகுதியில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவுவதே இருநாட்டு உறவுகளின் மேம்பாட்டிற்கு மிக அவசியம் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

ADVERTISEMENT