சென்னை-பெங்களூர் பயணிகளுக்கான ஹை டெக் பேருந்து நிலையம்
சென்னை மற்றும் பெங்களூரை சேர்ந்தவர்களுக்கான நற்செய்தி இது என்றே கூறலாம். அது என்னவென்றால், சென்னையில் உள்ள பல நகர போக்குவரத்து துறைகள் தொந்தரவில்லா போக்குவரத்தினை வழங்க தீவிரமாக செயல்பட்டுவருகின்றன. அதன்படி சென்னை பெருநகரின் போக்குவரத்தின் உள்கட்டமைப்பை நவீனமாக்கும் முயற்சியாக சென்னை குத்தம்பாக்கத்தில் அதிநவீன வைஃபை வசதிகளோடு பேருந்துநிலையம் அமைக்கப்படுகிறது. இந்த புது பேருந்துநிலையமானது வரும் ஆகாஸ்ட் மாதம் திறக்கப்படவுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம்(Cumta) சென்னை மெட்ரோ தனது சேவைகளை நீட்டிக்க பரிந்துரைத்தது. இதன் பணியானது தற்போது 70% நிறைவடைந்துள்ளது. பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் இதன் அருகில் உள்ளதால், அப்பகுதி மக்கள் மற்றும் பெங்களூர் செல்வோர் வருவோருக்காக இது மேம்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
25 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன பேருந்து முனையம்
சென்னை குத்தம்பாக்கத்தில் இந்த அதிநவீன பேருந்து முனையமானது ரூ.340 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களை ஈர்க்க விரிவான சிசிடிவி, இணைய இணைப்பு, 1,680க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் 235 நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதிகள், உணவு கடைகள், பயணிகளுக்கான லிப்டுகள், எஸ்கலேட்டர்கள், குடிநீர் வசதிகள் ஆகியவை இதில் அடங்கும் என்று செய்திகள் தெரிவிக்கிறது. திருமழிசை குத்தம்பாக்கத்தில் 25ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன பேருந்து முனையம் 70 அரசு பேருந்து நிலையங்களையும், 30 தனியார் சேவை தளங்களையும் உள்ளடக்கும் என்று தெரிகிறது.