LOADING...
CBSE மும்மொழி கொள்கை: 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு, புதிய வழிகாட்டுதல் வெளியீடு
மும்மொழி கொள்கை குறித்த புதிய மற்றும் தெளிவான வழிகாட்டுதல்களை CBSE வெளியிட்டுள்ளது

CBSE மும்மொழி கொள்கை: 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு, புதிய வழிகாட்டுதல் வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 29, 2026
04:27 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), ஜூலை 1 முதல் 6-ஆம் வகுப்பு முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் மும்மொழி கொள்கை குறித்த புதிய மற்றும் தெளிவான வழிகாட்டுதல்களை இன்று வெளியிட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கையின் (NEP 2020) கீழ் கொண்டு வரப்படும் இந்த மும்மொழி கொள்கையில், மாணவர்கள் கட்டாயமாக இரண்டு இந்திய மொழிகளையும், ஒரு வெளிநாட்டு அல்லது பிற மொழியையும் கற்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் தற்போதைய 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் கூடுதல் சுமை ஏற்படுமா என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், தற்போதைய 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த புதிய விதியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுவதாக சிபிஎஸ்இ வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

விலக்குகள்

மாறுதல் காலத்திற்கான சலுகைகள் மற்றும் விலக்குகள்

மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் வசதிக்காக இந்த புதிய கல்வி ஆண்டில் வாரியம் வழங்கியுள்ள முக்கிய தளர்வுகள்: தற்போதைய 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் பழைய இருமொழி கொள்கையையே தொடரலாம். இவர்களுக்கு 3-ஆவது மொழி கட்டாயமில்லை. தற்பொழுது 7, 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள், தங்களின் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது இந்த 3-ஆவது மொழிக்கான வாரியத் தேர்வை எழுதத் தேவையில்லை. ஏற்கனவே இரு வெளிநாட்டு மொழிகளை (உதாரணமாக: ஆங்கிலம் + பிரெஞ்சு) படித்து வரும் 7, 8, 9-ஆம் வகுப்பு மாணவர்கள், அதே மொழிகளைத் தொடரலாம். ஆனால், அதனுடன் கூடுதலாக ஒரு இந்திய மொழியை 3-ஆவது மொழியாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Advertisement