
பட்ஜெட் 2023: மாநில தலைநகரங்களில் யூனிட்டி மால் அமைப்பதற்கான அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
பட்ஜெட் 2023 கூட்டத்தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அறிவிப்புகளை தெரிவித்தார்.
இந்நிலையில் மாநிலங்களுக்கு சொந்தமான 'ஒரு மாவட்டம், ஒரு பொருள்'(ஓடிஓபி) மற்றும் இதர கைவினைப் பொருட்கள் விற்பனையை ஊக்கப்படுத்த யூனிட்டி மால் என்று கூறப்படும் ஒருங்கிணைந்த சந்தை நிறுவப்படும் என்று அவர் அறிவித்தார்.
மேலும் இது மாநில தலைநகரங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் அமைக்க மாநில அரசுகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆனால், யூனிட்டி மால் என்றால் என்ன, அது எப்படி இயங்கும் என்பது குறித்த விவரங்கள் அளிக்கப்படவில்லை.
உள்ளூர் மாவட்ட தயாரிப்புகள், இந்திய அரசின் பொருட்கள், கைவினை பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்வதோடு, மக்களிடையே விளம்பரப்படுத்தப்படும் ஒன்றாகும் என்று தெரிவித்தார்.
குஜராத்தில் யூனிட்டி மால்
கைவினை பொருட்கள், விவசாயம் சார்ந்த பொருட்களை ஊக்குவிக்கப்படுவதற்கான முயற்சி
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் ஏக்தா நகரில் யூனிட்டி மால் என்று கூறப்படும் இந்த ஒருங்கிணைந்த சந்தை செயல்பட்டு வருகிறது.
மாநில உள்ளூர் பொருட்கள், கைவினைபொருட்கள் கொண்ட இந்த மால் இரண்டுதளங்கள் கொண்டு 35000சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் மாநிலங்களின் பாரம்பரிய ஜவுளி மற்றும் கைவினைபொருட்களின் 20எம்போரியங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த யூனிட்டி மாலில் அந்தந்த மாநிலங்களில் உள்ள மாவட்டங்களின் தயாரிப்புகள் மட்டுமல்லாமல் பிறமாநில தயாரிப்புகள், பிற கைவினைபொருட்கள், புவியியல் குறியீடு உள்ள தயாரிப்புகள் உள்ளிட்டவற்றிற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் பிராந்திய பொருட்களை எளிதாக அணுகமுடியும் என்றும், அதேநேரத்தில் அந்த பொருட்களை தயாரிப்போருக்கு மூலதனமும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதற்காக தேர்வுசெய்யப்படும் தயாரிப்புகளுள் விவசாயப்பொருட்கள், தானியங்கள், இறைச்சி, மீன்வளம் ஆகியனவும் அடங்கும்.