
அடுத்த வருடம் BSNL 5ஜி சேவை தொடங்கப்படும்: மத்திய அமைச்சர்!
செய்தி முன்னோட்டம்
BSNL 5ஜி சேவை 2024ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.
தனியார் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல்லில் 5ஜி சேவை ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், பொதுத்துறை நிறுவனமான BSNL-இல் எப்போது 5ஜி சேவை தொடங்கப்படும் என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பதிலளித்தார்.
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவை நேற்று(ஜன:5) ஒடிசாவில் தொடங்கப்பட்டது.
இதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.
அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "BSNL-இல் 2023ஆம் ஆண்டு 4ஜி சேவையும் 2024ஆம் ஆண்டு 5ஜி சேவையும் தொடங்கப்படும்" என்றார்.
ட்விட்டர் அஞ்சல்
BSNL 5ஜி சேவை 2024ஆம் ஆண்டு அறிமுகம்!
#SMARTயுகம் | “பி.எஸ்.என்.எல்: 2023ல் 4ஜி, 2024ல் 5ஜி...” - ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!#SunNews | #BSNL | #5GinIndia pic.twitter.com/b7u0fq0mS6
— Sun News (@sunnewstamil) January 6, 2023