3,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஏர்டெல்லின் 5G சேவை.. பயன்படுத்துவது எப்படி?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏர்டெல் நிறுவனம் 5G சேவையை வழங்கத் தொடங்கியது. படிப்படியாக ஒவ்வொரு மாநிலத்தின் முக்கிய நகரங்களிலும் 5G சேவையை விரிவுபடுத்தி வந்தது அந்நிறுவனம்.
தற்போது இந்தியா முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் 5G சேவையை வழங்கியிருப்பதாக அறிவித்திருக்கிறது.
ஜியோ நிறுவனமும் 5G சேவைகளை இந்தியாவில் வழங்கி வருகிறது. ஆனால், 5G சேவை வழங்கப்பட்ட இடத்தில் 5G மொபைலைக் கொண்டிருந்தாலும், இன்விடேஷன்-ஒன்லி அடிப்படையிலேயே அந்த சேவையை வழங்கி வருகிறது ஜியோ.
ஆனால், ஏர்டெல் 5G சேவை வழங்கும் நகரங்களில் இருக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அனைவரும், 5G வசதியுடனைய ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் அன்லிமிடெட் 5G டேட்டாவைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
ஏர்டெல்
ஏர்டெல்லின் 5G பிளான்கள் என்ன.. எப்படிப் பயன்படுத்துவது?
தனிப்பட்ட முறையில் 5G பிளானகளை இன்னும் ஏர்டெல் வழங்கத் தொடங்கவில்லை. குறிப்பிட்ட 4G பிளான்களில் கூடுதல் சேவையாக அன்லிமிடெட் 5G டேட்டாவையும் சேர்த்து வழங்குகிறது அந்நிறுவனம்.
ரூ.239-ல் தொடங்கி, அதற்கு மேற்பட்ட பெரும்பாலான ப்ரீபெய்டு பிளான்களில் கூடுதல் 5G சேவையை வழங்குகிறது ஏர்டெல்.
ரூ.399 மற்றும் அதற்கு மேலான போஸ்ட்பெய்டு திட்டங்களிலும் ஏர்டெல்லின் 5G சேவை வழங்கப்படுகிறது.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 5G ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி, அந்நிறுவனம் உங்கள் நகரத்திலும் 5G சேவைை வழங்கும் பட்சத்தில், உங்கள் ஸ்மார்ட்போனில் Settings > Network and connectivity > Airtel Sim > Enable 5G என்ற ஆப்ஷனை தேர்வு செய்து 5G டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.