LOADING...
காதலித்துத் திருமணம் செய்த 24 மணி நேரத்தில் விவாகரத்து! புனே தம்பதியின் வினோத முடிவு; பின்னணி என்ன? 
காதலித்துத் திருமணம் செய்த 24 மணி நேரத்தில் விவாகரத்து

காதலித்துத் திருமணம் செய்த 24 மணி நேரத்தில் விவாகரத்து! புனே தம்பதியின் வினோத முடிவு; பின்னணி என்ன? 

எழுதியவர் Sekar Chinnappan
Dec 28, 2025
08:36 am

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதி ஒன்று, திருமணம் முடிந்த அடுத்த 24 மணி நேரத்திலேயே விவாகரத்து கோரி பிரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து பெற்ற தம்பதியினர் இருவரும் கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இதில் பெண் மருத்துவராகவும், ஆண் பொறியாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர். நீண்ட நாள் காதலுக்குப் பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணம் முடிந்த கையோடு எதிர்கால வாழ்க்கை மற்றும் வசிப்பிடம் குறித்த பேச்சு எழுந்தபோது, இருவருக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

காரணம்

விவாகரத்துக்கான முக்கிய காரணம்

இந்த வழக்கை கையாண்ட வழக்கறிஞர் ராணி சோனாவனேவின் கருத்துப்படி, அந்த மணமகன் வர்த்தக கப்பலில் பணியாற்றுபவர். திருமணம் முடிந்த பிறகு, தனது வேலை நிமித்தமாகத் தான் எப்போது ஊருக்கு வருவேன் அல்லது எங்கே பணி அமர்த்தப்படுவேன் என்பது குறித்துத் தன்னிடம் தெளிவான தகவல் இல்லை என்று மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால், அவரது மனைவிக்குத் தனது வேலையை விட்டுவிட்டு அவருடன் தொடர்ந்து பயணம் செய்வதிலோ அல்லது நிச்சயமற்ற சூழலில் காத்திருப்பதிலோ விருப்பம் இல்லை.

தீர்ப்பு

நீதிமன்றத்தின் தீர்ப்பு

இருவருக்கும் இடையிலான கருத்தியல் வேறுபாடுகள் மிகவும் ஆழமாக இருந்ததால், இருவரும் பரஸ்பரம் சம்மதத்துடன் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இந்த வழக்கில் வன்முறை அல்லது குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாததால், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கியது. இரண்டு ஆண்டுகாலக் காதலில் இந்த முக்கியமான விஷயம் குறித்து ஏன் விவாதிக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருப்பதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Advertisement