
பழம்பெரும் நடிகர் 'அடடே' மனோகர் வயது மூப்பினால் காலமானார்
செய்தி முன்னோட்டம்
பழம்பெரும் நாடக நடிகரும், தொலைக்காட்சி நடிகருமான 'அடடே' மனோகர் இரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த தகவல், அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சமீப காலமாகவே வயது மூப்பு காரணமாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மனோகர், பிப்ரவரி 27 அன்று உயிரிழந்தார்.
'அடடே' மனோகர், சுமார் 3000-திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்து பிரபலமானவர். இவரது இயற்பெயர் முரளி மனோகர்.
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இவர் நடித்த, 'அடடே மனோகர்' என்கிற காமெடி நிகழ்ச்சி பிரபலமடையவே, முரளி மனோகர், 'அடடே' மனோகர் என்று ஆனார்.
மேடை நடங்கங்கள் தவிர, தொலைக்காட்சி சீரியல், வானொலி, திரைப்படங்கள் என பலதுறைகளில் கால் பதித்தவர் இவர். கடந்த சில வருடங்களாகவே வயதுமூப்பு காரணமாக, நடிப்பிலிருந்து விலகி ஓய்வில் இருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
'அடடே' மனோகர் மறைவு
பிப்ரவரி 27
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) February 28, 2024
பழம்பெரும் மேடை நாடகம் மற்றும் சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகரும், கதாசிரியருமான அடடே மனோகர் அவர்கள், நேற்று இரவு இறைவனடி சேர்ந்தார். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.#அடடே_மனோகர்#AdadeManohar #RIPAdadeManohar pic.twitter.com/2B2XlndFhh