Page Loader
விஜய்-வெங்கட் பிரபு-யுவன் கூட்டணி உருவாக போகிறதா? இணையத்தில் பரவும் தகவல்
தளபதி 68: விஜய்-வெங்கட் பிரபு-யுவன் கூட்டணியா?

விஜய்-வெங்கட் பிரபு-யுவன் கூட்டணி உருவாக போகிறதா? இணையத்தில் பரவும் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
May 15, 2023
06:32 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் தற்போது 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். அவரின் 70-வது படத்தை, சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்க போகிறது என சென்ற வாரம் செய்திகள் வெளியான நிலையில், இன்று 'தளபதி 68' திரைப்படத்தை இயக்கபோவது வெங்கட் பிரபு என்ற செய்தி பரவிவருகிறது. ஏற்கனவே ஒரு நேர்காணலில், விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது தனது நெடுநாள் ஆசை என அவர் கூறிய நிலையில், தற்போது இந்த செய்தி கசிந்துள்ளது. விறுவிறுப்பான திரைக்கதைக்கு பெயர்பெற்றவர் வெங்கட் பிரபு. சமீபத்தில், நாகசைதன்யாவை வைத்து 'கஸ்டடி' என்ற இருமொழி படத்தையும் இயக்கியிருந்தார். இந்நிலையில், 'தளபதி 68' திரைப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்கபோவதாகவும், படத்திற்கு இசையமைக்கவிருப்பது யுவன்ஷங்கர் ராஜா எனவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

'தளபதி 68 ' இயக்கப்போவது யார்?